உலகம்

22 வருடங்கள் அடையாளத்தை மறைத்து வாழ்ந்த இனப்படுகொலை சந்தேகநபர் கைது!

1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தேடப்பட்டு வந்த ஃபுல்ஜென்ஸ் கயிஷேமா  தென்னாப்பிரிக்காவின் பார்ல் நகரில் கைது செய்யப்பட்டதாக ருவாண்டாவில் நடந்த போர்க்குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்ப்பாயம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த அவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

தென்னாப்பிரிக்க அதிகாரிகள் மற்றும் ஐநா புலனாய்வாளர்களுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கையில் அவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டபோது, கயிஷேமா தனது அடையாளத்தை முதலில் மறுத்ததாக ஐநா குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் மாலையின் முடிவில் அவர் அவர்களிடம் கூறினார்: “நான் கைது செய்யப்படுவதற்கு நீண்ட காலமாக காத்திருக்கிறேன்.”

புலனாய்வாளர்கள் அவர் பல அடையாளங்களைப் பயன்படுத்தியதாகவும், கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகவும் கூறினார்.

ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையின் போது நியாங்கே கத்தோலிக்க தேவாலயத்தில் ஏறத்தாழ 2,000 துட்ஸிகள் கொல்லப்பட்டதை கயிஷேமா திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக குற்றவியல் நீதிமன்றங்களுக்கான சர்வதேச அமைப்பு (IRMCT) தெரிவித்துள்ளது.

“ஃபுல்ஜென்ஸ் கயிஷேமா 20 ஆண்டுகளுக்கும் மேலாக தப்பியோடியவர். அவர் செய்த குற்றங்களுக்கு அவர் இறுதியாக நீதியை எதிர்கொள்வார் என்பதை அவரது கைது உறுதி செய்கிறது,” என்று IRMCT வழக்கறிஞர் செர்ஜ் பிரம்மெர்ட்ஸ் கூறினார்.

இனப்படுகொலையை நிகழ்த்தியதில் கயிஷேமா ஒரு முக்கியமான நபர்.

ஜூலை 1994 இல் இனப்படுகொலையின் முடிவில், கயிஷேமா தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனருடன் கொங்கோ ஜனநாயகக் குடியரசிற்கு தப்பிச் சென்றார். மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்த பிறகு, 1999-ல் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று கேப் டவுனில் தஞ்சம் புகுந்து, போலியான அடையாளத்துடன் வாழ்ந்து வந்தார்.

வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, அவர் தென்னாப்பிரிக்காவிற்கு வந்ததிலிருந்து, முன்னாள் ருவாண்டா இராணுவ உறுப்பினர்கள் உட்பட ஒரு இறுக்கமான ஆதரவு வலையமைப்பின் உதவியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

2001 இல் ருவாண்டாவிற்கான ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் கயிஷேமா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கிபுயே மாகாணத்தில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கயிஷேமா போன்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் ருவாண்டாவிலோ அல்லது ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ விசாரணையை எதிர்கொள்ளலாம்.

தான்சானியாவை தளமாகக் கொண்ட ருவாண்டா தீர்ப்பாயம் அதன் வழக்குகளை 2008 இல் முடித்துக்கொண்டது, அதன் பிறகு IRMCT அதன் மீதமுள்ள பணிகளை முடிக்க நிறுவப்பட்டது.

ருவாண்டாவின் நியாங்காவில் நடந்த நிகழ்வுகள் இனப்படுகொலையின் மிகக் கொடூரமான ஒன்றாகும், இதில் 90 நாட்களில் 800,000 டுட்ஸிகள் மற்றும்  மிதவாத ஹூட்டுக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கயிஷேமா நேரடியாகப் பங்கேற்றதாக தீர்ப்பாயம் குற்றம் சாட்டுகிறது. அகதிகள் தேவாலயத்தில் இருந்தபோது, தேவாலயத்தை எரிக்க பெட்ரோல் வாங்கி விநியோகித்தார் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து கயிஷேமாவும் மற்றவர்களும் புல்டோசரைப் பயன்படுத்தி, தேவாலயத்தை இடித்தனர். அப்போது அககள் உள்ளே இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

தேவாலயத்தின் முன்னாள் பாதிரியார், அதானசே செரோம்பா, 2006 ஆம் ஆண்டில் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார், பின்னர் அது மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாக அதிகரிக்கப்பட்டது.

கேப்டவுன் நீதிமன்றத்தில் கயிஷேமா வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

ருவாண்டா இனப்படுகொலையில் ஹுட்டு கிளர்ச்சியாளர்களும் பொதுமக்களும் துட்சி இன சிறுபான்மையினரின் ஏராளமானவர்களைக் கொன்றனர். 100 நாட்களுக்குப் பிறகு, பால் ககாமே தலைமையிலான ருவாண்டா தேசபக்தி முன்னணி (RPF) துருப்புக்கள், ஹுட்டு கிளர்ச்சியாளர்களைத் தோற்கடித்து, நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியபோது, கொலைகள் இறுதியாக முடிவுக்கு வந்தன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

Pagetamil

உக்ரைனின் கடைசிப் போர்க்கப்பலையும் அழித்தது ரஷ்யா

Pagetamil

சூடான் போர் நிறுத்தத்திலிருந்து இராணுவம் விலகுகிறது!

Pagetamil

வடக்கு கொசோவாவுக்கு கூடுதல் துருப்புக்களை அனுப்புகிறது நேட்டோ

Pagetamil

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் மீது உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் முயற்சி தோல்வி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!