பசறை, மடவெலகம பகுதியில் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து வீழ்ந்ததில் 17 வயதுடைய மாணவன் பலத்த காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் திங்கட்கிழமை (22) இரவு உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
தர்ஷன இதுரங்க என்ற பசறை கெமுனு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கற்கும் மாணவவனே உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவர் மேலும் பல நண்பர்களுடன் சேர்ந்து மற்றுமொரு நண்பரின் வீட்டிற்கு கல்வி கற்கச் சென்றதாகவும், இரவு 10.00 மணியளவில் கழிவறைக்கு செல்ல முற்பட்ட போது 40 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1