25.7 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

அடர்ந்த காட்டுக்குள் கல்யாணம் செய்த ஜோடி

பதவிய பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது மகனின் திருமண வைபவத்தை நேற்று முன்தினம்  (21) அடர்ந்த காடு ஒன்றின் மத்தியில் நடத்தினார்.

பதவிய – புல்மோட்டை வீதி, உறுவ பிரதேசத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில், கொஹொம்பபிட்டிய குளத்துக்கு அருகில் திருமண ஏற்பாடு செய்யப்பட்ட.து

மணமகனும், மணமகளும் அமர்ந்திருந்த நாற்காலியும் காட்டில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அழகாக அமைக்கப்பட்டிருந்தது.

மணமகன் ஸ்ரீபுரவில் வசிக்கும் நடுன் சதுரங்க . மணமகள் கொலோங்கொல்ல  தசாஞ்சலி.

இந்த திருமண விழாவில் டோலக், தபேலா மற்றும் பியானோவைப் பயன்படுத்தி  மெல்லிசை இசைக்கப்பட்டது. பெரிய சத்தமாக இசை ஒலிக்கவிடப்படவில்லை.

காடுகளை நேசிக்கும் விவசாயியான மணமகனின் தந்தை சமந்த பிரேமலால் தனது மகனின் திருமண விழாவை இவ்வாறு காட்டின் நடுவில் நடத்த ஏற்பாடு செய்தார்.

காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த திருமண விழாவில் இருதரப்பையும் சேர்ந்த சுமார் 300 உறவினர்கள் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹெராயின் கடத்தல்: 26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

east tamil

உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

Pagetamil

நுண் நிதிக்கடன் தொடர்பில் விரைவில் திருத்தம்

east tamil

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Pagetamil

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

east tamil

Leave a Comment