சிங்கப்பூரில் 8வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இலங்கைப் பெண்: தற்கொலையா?

Date:

சிங்கப்பூரில் பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவர் வீட்டுத் திட்டத்தின் 8வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டுவவை சேர்ந்த நடிகா தில்ஹானி பெர்னாண்டோ (41) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவர் தான் பணியாற்றிய அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரான பஞ்சாபி மனிதரால் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தனது நண்பர்களிடம் வட்ஸ்அப் வழியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு வீட்டு உரிமையாளரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தனது தந்தை இறந்து விட்டதாக கூறிவிட்டு நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சிங்கப்பூரில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதற்கிடையில், மரணத்தை நேற்று உறுதிப்படுத்திய வெளியுறவு அமைச்சகம், சிங்கப்பூர் அதிகாரிகள் இன்னும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியது.

மரணத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பிரியங்கா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் வீட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்துவிட்டதாகவும், அவரது மரணம் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுடன் இலங்கை தூது தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார். தனது மனைவி கொல்லப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்