வைத்தியர் ஷாஃபியின் மனு நிராகரிப்பு!

Date:

குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவே இவ்வாறு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இது தொடர்பான விடயங்களை நீண்ட காலம் பரிசீலித்ததன் பின்னர் இந்த தீர்மானத்தை இன்று வழங்கியுள்ளது.

குருணாகல் பொலிஸாரினால் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பணச்சலவை சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்யப்பட்டு தடுத்து வைப்பட்டிருந்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக்கோரி வைத்தியர் ஷாஃபி இந்த அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பில் சூம் வழியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கு எதிர்ப்பு!

தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்...

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்