24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

கோட்டாபய கொலை முயற்சி வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஆருரன் விடுதலை!

2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பொறியியலாளரான சிவலிங்கம் ஆருரனை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க விடுதலை செய்தார்.

2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு கொள்ளுபிட்டி பித்தலைசந்தியில் பாதுகாப்பு செயளாளரான கோத்தபாய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடாத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன் பாதுகாப்பு செயளாளரான கோத்தபாய ராஜபக்ஸஇ; இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன் அரசசொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2012ம் ஆண்டு மார்கழி மாதம் நான்காம் திகதி குற்றச் சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த குற்றச் சாட்டுப்பத்த்pரத்தில்; கைதியான சிவலிங்கம்; ஆருரன் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கையில் பொலிஸ் அத்தியட்சகருக்கு சுயவிருப்பத்தில் வழங்கியதாக கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அரச தரப்பின் பிரதான சான்றாக முன்வைக்கப்பட்டு குற்றச் சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபொழுது அரச தரப்பின் பிரதான சான்றான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக எதிரியினால் வழங்கப்படவில்லை என்ற ஆட்சேபனையை எதிரி சார்பில் முன்வைக்கப்பட்டதனையடுத்து உண்மை விளம்பல் விசாரணை நடைபெற்றது

உண்மை விளம்பல் விசாரணையில் கைதியான சிவலிங்கம் ஆருரனை பொலிசார் சித்திரவதை செய்து கடும் காயங்களை ஏற்படுத்தி குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தினை பெற்றுக் கொண்டனர்; என்பதனை சாட்சியங்கள் மூலம்; எதிரி தரப்பில் நீருப்பிக்கப்பட்டுள்ளமையை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அரசதரப்பின் முக்கிய சான்றான முன்வைக்கப்பட்ட குற்றஒப்புதல் வாக்கு மூலத்தை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நிராகரிப்பதாக கட்டளை வழங்கினார்.

குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை நிராகரிப்பதாக நீதிமன்றம் கட்டளை வழங்கியதையடுத்து எதிரிதரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசர் இந்த அரசியல் கைதி 15 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்து இந்தக் கைதிக்கு எதிராக வழக்கை மேலும் தொடர்ந்தும் நடாத்தவேறு அரச சாட்சியங்கள் இல்லையாயின் கைதியை விடுதலை செய்யம்படி தனது சமர்பனத்தில் வேண்டிக் கொண்டதையடுத்து சட்டமாஅதிபர் சார்பில் ஆஜராகிய பிரதிசொலிசிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய வேறு சாட்சியங்கள் இல்லையென நீதிமன்றிற்கு அறிவித்ததையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க சிவலிங்கம் ஆருரனை விடுதலை செய்தார்.

இந்த வழக்கில் அரச சார்பாக பிரதிசொலிசிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய ஆஜராகியதுடன் எதிரி சார்பில் சட்டத்தரணிகளான தர்மஜா தர்மராஜா, தர்சிகா தர்மராசா ஆகியோரின் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜரானார்.

ஆருரன் வடமராட்சி திக்கத்தை சேர்ந்தவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

east tamil

பண்டாரகமவில் பழ வியாபாரியிடம் 150,000 ரூபா கொள்ளை

east tamil

மாணவியுடன் ஆபாச காணொளிகள் பகிர்ந்த பாடசாலை ஆசிரியை கைது

east tamil

கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Pagetamil

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

Pagetamil

Leave a Comment