ஆபிரிக்க தலைவர்களின் சமரசத்துக்கு ரஷ்யா- உக்ரைன் தலைவர்கள் இணக்கம்

Date:

ரஷ்யா- உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர, ஆபிரிக்க தலைவர்களின் தலையீட்டை இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டதாக  தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

“புடின்,  ஜெலென்ஸ்கியுடனான எனது கலந்துரையாடல், அவர்கள் இருவரும் ஆப்பிரிக்கத் தலைவர்களை வரவேற்கவும், இந்த மோதலை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து விவாதிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தது,” என்று சிங்கப்பூர் பிரதமருடனான செய்தியாளர் சந்திப்பில் ராமபோசா கூறினார்.

“அது வெற்றி பெறுமா இல்லையா என்பது நடைபெறும் விவாதங்களை பொறுத்தே அமையும்,” என்று அவர் கூறினார்.

செனகல், உகாண்டா மற்றும் எகிப்து நாடுகளின் தலைவர்கள் சமாதானத் திட்டத்தை ஆதரிப்பதாகவும், ஐ.நா பொதுச்செயலாளர், அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் ராமபோசா கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்