75 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நேற்றிரவு சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபர் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
51 வயதுடைய நபர், அந்தப் பெண்ணுடன் பேசுவதை போல சென்று, மானபங்கம் செய்ய முயன்றுள்ளார்.
எனினும், பிரதேசவாசிகள் கண்டதையடுத்து, குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் முதலில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



