‘வணங்கான்’ படத்தில் இருந்து விலகியது ஏன்?: மவுனம் கலைத்த கீர்த்தி ஷெட்டி

Date:

பாலா இயக்கி வரும் ‘வணங்கான்’ படத்திலிருந்து விலகியது குறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி மவுனம் கலைத்துள்ளார்.

இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகினார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், “வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது” என்று கூறியிருந்தார்.

தற்போது இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு முதலில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். அவரும் விலகவே தற்போது அவருக்கு பதில் ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து இதுவரை கீர்த்தி ஷெட்டி வாய் திறக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், ‘கஸ்டடி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கீர்த்தி ஷெட்டி இது குறித்து பதிலளித்துள்ளார்.

’வணங்கான்’ படத்தின் தயாரிப்புப் பணிகள் நீண்டுகொண்டே சென்றதால் படத்தில் இருந்து விலக முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார். மேலும் பாலா – சூர்யா இருவருக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று கீர்த்தி ஷெட்டி தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வர்த்தகரை சுட்டுக்கொல்ல பதுங்கியிருந்த 2 பேர் கைது!

ஹொரணைப் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக, அவரது வீட்டின்...

மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

ரம்பேவ, பொருலுஹின்ன கிராமத்தில் நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்