லைவ் வீடியோவில் நடிகை சதா கண்ணீர்

Date:

தமிழில், ‘ஜெயம்’, ‘அந்நியன்’, ‘உன்னாலே உன்னாலே’, ‘எலி’, ‘டார்ச்லைட்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சதா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கும் சதா, வைல்ட் லைஃப் போட்டோகிராபியில் ஆர்வம் காட்டி வந்தார். மும்பையில் ‘எர்த்லிங்ஸ் கஃபே’ என்ற ஓட்டலையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில் ஓட்டலை மூடப்போவதாக கண்ணீருடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ‘இதை 2019ஆம் ஆண்டு ஆரம்பித்தேன். 2023 ஏப்ரலில் கடையை காலி செய்யும்படி உரிமையாளர் கூறிவிட்டார். அதிர்ச்சியாக இருந்தது. இது என் குழந்தை. மோசமாக இருந்த இடத்தை என் உழைப்பால் மாற்றினேன்.

வேறு வழியில்லை. இந்த இடத்தில் இருந்து வெளியேறுகிறேன். இந்த மாதம் 27ஆம் திகதிக்குப்பின், இது என் கடையாக இருக்காது’ என கண்ணீருடன் சதா தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை சர்ச்சை: சீ.வீ.கே.சிவஞானம் விளக்கம்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிசார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்