வவுனியாவில் ஆசிரியருக்கு அவதூறு பரப்பிய விவகாரத்தில் விதானையாரிடம் விசாரணை!

Date:

வவுனியாவில் தமிழ் பாட ஆசிரியர் மீது சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி அவதூறு பரப்பியவர் கிராம அலுவலர் என தெரியவந்துள்ளது. அவரிடன் விசாரணைகள் இடம்பெறுகின்றன என வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காடழிப்பை வெளிக்கொண்டு வந்தமையால் ஆசிரியருக்கு எதிராக இந்தப் போலி பரப்புரை இடம் பெற்றுள்ளது என தெரியவந்துள்ளதாகவும் பொலி சார் தெரிவித்தனர்

வவுனியா கட்டையர்குளம் பகுதியில் கிராம அலுவலர் உள்ளடங்களாக சிலர் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை அந்தப் பகுதி கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளர், வவுனியா பிரதேச செயலாளர், வன இலாகா, பொலிசார் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் கிராம அபிவிருத்திச்சங்கம் சார்பாக செயற்பட்ட குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் ஆசிரியருக்கு எதிராக முகநூல்களில் அவதூறும் பரப்பப்பட்டது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் வவுனியா தொழில்நுட்ப குற்ற தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தார்.

ஆசிரியர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியமை தொடர்பில் கிராம அலுவலர் ஒருவரின் பின்னணி தெரிய வந்தது. அவரை அழைத்து வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன என அாதரிசார் தெரிவித்தனர்.

இதைவிட குறித்த அலுவலருக்கு எதிராக வன இலாகாவினால் கொடுக்கப்பட்ட வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நிலையில், குறித்த அலுவலர் தொடர்பில் பிரதேச செயலாளர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...

திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள்...

பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்