யாழில் இன்று சிறி சபாரத்தினம் நினைவஞ்சலி

Date:

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் சிறிசபாரத்தினத்தின் நினைவு நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் அன்னங்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், கொக்குவில், பொற்பதியில் அறிவாலய இல்லத்தில் நினைவுக்கூட்டம் நடைபெறும்.

ரெலோ இயக்கத்தின் தலைவரான சுந்தரம்பிள்ளை முதலியார் சிறிசபாரத்தினம், 1986ஆம் ஆண்டு மே 6ஆம் திதகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஏப்ரல் மாத இறுதி நாட்களில் புலிகளால் ரெலோ இயக்கம் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திருநெல்வேலியை அண்டிய பகுதிகளிலும், கோண்டாவிலிலும் வீடுகள், தோட்ட குடில்களில் மறைந்திருந்த சிறிசபாரத்தினம், அன்னங்கையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

அன்னங்கையிலுள்ள ரெலோ போராளியொருவரின் வீட்டில் மறைந்திருந்த நிலையில், விடுதலைப் புலிகளினால் அந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது. வீட்டின் பின்புறமிருந்த புகையிலை தோட்டத்துக்குள் சிறிசபாரத்தினமும் சில ரெலோ போராளிகளும் மறைந்து கொண்டனர். தோட்டத்தை சல்லடையிட்டு சிறிசபாரத்தினத்தை புலிகள் சுட்டுக் கொன்றனர். சிறிசபாரத்தினத்துடன் தங்கியிருந்த இருவர் அந்த முற்றுகைக்குள்ளிருந்து வெளியேறி தப்பிச் சென்றனர்.மேலும் சுமார் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் காலில் சுட்டு காயப்பட்டுத்தப்பட்டனர். அவர்கள் சில மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் புலிகளால் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சகோதரப்படுகொலை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெரும் கரும்புள்ளியாக அமைந்தது.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்