முகப்பூச்சு கிறீம் தொடர்பில் அண்ணனுடன் தகராறு: தங்கை தற்கொலை!

Date:

முகத்துக்குப் பூசும் கிறீம் மூலம் அண்ணனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கதால் 11 வயதுடைய மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை ட்றூப் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று (05) மாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

நேற்று போயா தினம் என்பதால் அண்ணன் தங்கை மற்றும் பாட்டியுடன் ஆலயத்திற்கு செல்ல தயாராகும். போது அண்ணன் பயன்படுத்தும் கிறீமை தங்கை பயன்படுத்தியுள்ளார்.

இதன் போது அண்ணன் தங்கையிடம். ஏன் எனது கிறீமை போடுகின்றாய் என கேட்டுள்ளார்.

அதன் பின்னர் பாட்டியுடன் குறித்த மாணவன் ஆலயத்திற்கு செல்லும் போது தனது தங்கையையும் அழைத்த போது ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ள வருவதற்கு மறுத்துள்ளார். இதை அடுத்து பாட்டியும் மாணவனும் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை முடித்து கொண்ட ஆலயத்தில் வழங்கப்பட்ட ‌ அன்னதானத்தினை தங்கைக்கும் எடுத்துகொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அயலவர்கள் உன்னுடைய சகோதரி இறந்துள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இளைஞன் மற்றும் பாட்டியும் வீட்டுக்கு வந்த போது தங்கை தற்கொலை செய்துகொண்ட விடயம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தலவாகலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது, எனது தங்கையிடம் அன்பாக இதனை கூறியதாகவும், இவ்வாறு செய்து கொள்ளுவார் என தனக்கு தெரியாது எனவும் எப்போதும் பேசுவது போல் பேசியதாகவும் அண்ணன் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

குறித்த மாணவி தரம் 08 கல்வி கற்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவியின் தாய் தந்தை கொழும்பில் தொழில் புரிவதாகவும் மணவியும் தனது சகோதரரும் பாட்டின் அரவணைப்பிலேயே இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்