வாகனேரியில் யானை தாக்குதலில் ஒருவர் பலி

Date:

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

.சுற்றுலா விடுதி வாகனேரியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான க.ஜெயந்தன் (24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை (3) வழக்கம் போல் மாடு கட்டும் தொழிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வீட்டில் அருiகாமையில் நின்ற யானையே இவரை தாக்கியுள்ளது.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வாழைச்சேனை பொலிசார், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி வ.இரமேஸ் ஆனந்தன் ஆகியோர்கள் சடலத்தை பார்வையிட்டனர்.

இதன்போது காட்டு யானையின் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்து பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிசாருக்கு பணிப்புரை விடுத்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் கடந்த 3 நாட்க்களுக்கு முன்பும் வீதியால் சென்ற நபர் ஒருவரை துரத்தி துரத்தி தாக்கியதாகவும் அதிஸ்டவசமாக அவர் யானையின் தாக்குதலில் இருந்து உயிh தப்பியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே யானை வேலி அமைத்து பாதுகாப்பு பெற நடவடிக்கை எடுத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொதுமக்கள் கேட்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்