அயல் வீட்டில் வசிக்கும் 21 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய யுவதியை மிகக் கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொல்பகொட பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான யுவதி கொய்யாப்பழம் பறிக்கச் சென்றிருந்த நிலையில், சந்தேக நபர் அயலில் உள்ள தனது காணியை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
சந்தேக நபர் யுவதியை தனது காணிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்.
யுவதி நடந்த சம்பவத்தை வீட்டிற்கு அருகில் வசிக்கும் உறவினரிடம் கூறினார். சிறுமியின் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறியதையடுத்து, அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.




