ரணில்- தமிழ் தரப்பு அடுத்த வாரம் பேச்சு ஆரம்பம்: 3 நாட்கள் தொடரும்!

Date:

இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் அடுத்த வாரத்தில் 3 நாட்கள் தொடர் பேச்சு நடக்கவுள்ளது.

அடுத்த வாரம் 11, 12, 13ஆம் திகதிகளில் இந்த பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து பேச்சுக்கான அழைப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

3 நாட்களும் மாலையில் பேச்சு நடக்கவுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் நாளை அல்லது மறுநாள் அனைத்து நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.

11ஆம் திகதி பொதுப்பிரச்சினை தொடர்பாகவும், 12ஆம் திகதி  அதிகார பகிர்வு தொடர்பாகவும், 13ஆம் திகதி அபிவிருத்தி தொடர்பாகவும் பேசப்படவுள்ளது.

முதல் இரண்டு நாட்களும் மாலை 5 மணிக்கும், இறுதிநாள் மாலை 4.30 மணிக்கும் சந்திப்பு நடக்கவுள்ளது.

இதேவேளை, தமிழ் தரப்புடனான சந்திப்புக்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தனியாக சந்திக்க வேண்டுமென தமிழ் அரசு கட்சி தரப்பில், ஜனாதிபதி தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு நடைமுறையில் இல்லையென்பதை ஏற்கெனவே ஜனாதிபதி நன்கறிந்துள்ளதால், இலங்கை தமிழ் அரசு கட்சி சந்திக்க விரும்புகிறதா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பா என தமிழ் அரசு கட்சியிடமும், ரெலோ, புளொட் கட்சிகளுடனும் பேசி அறிய ஜனாதிபதி தரப்பு தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

spot_imgspot_img

More like this
Related

வர்த்தகரை சுட்டுக்கொல்ல பதுங்கியிருந்த 2 பேர் கைது!

ஹொரணைப் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக, அவரது வீட்டின்...

மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

ரம்பேவ, பொருலுஹின்ன கிராமத்தில் நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்