வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உடைக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட 5 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, இன்று சிலைகள் வைக்கப்பட்டன.
சிவன், முருகன், பிள்ளையார், அம்மன், வைரவர் சிலைகள் இன்று பிரதிட்டை செய்யப்பட்டன.
சிலைகள் வைக்க ஆயத்தங்கள் செய்யப்பட்ட போது, நெடுங்கேணி பொலிசார்தை தடை செய்ய முற்பட்டனர். உடைக்கப்பட்ட சிலைகளையே மீள வைக்கலாமென பொலிசார் குறிப்பிட்டனர்.
எனினும், சம்பவ இடத்திற்கு வந்த தொல்லியல் திணைக்களத்தினர், புதிய சிலைகளை வைக்கலாமென குறிப்பிட்டனர். இதையடுத்து பொலிசார் இதில் தலையிடவில்லை.
தற்போது 5 சிலைகளும் வைக்கப்பட்டு, சமய முறைப்படி இயந்திர தகடு, மருந்து என்பன வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சிறிது நேரத்தில் பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1