புகையிரதம் மோதி பாடசாலை மாணவி பலி

Date:

நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளச் சென்ற 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கடந்த 25ஆம் திகதி இரவு புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை அலவெல்ல நுபே பகுதியில் ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹித்தெட்டிய கிழக்கைச் சேர்ந்த தேவ்மினி சந்தருவாணி (16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் ஹித்தெட்டிய தர்மராஜா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக மேலும் மூன்று நண்பர்களுடன் ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக போலீசார் கூறுகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்