வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடு மேற்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
அத்துடன், ஆதிலிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டுமென்றும் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியுமென கடந்த 24ஆம் திகதி உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை இன்று வரை ஒத்தி வைத்திருந்தது.
இன்று தொல்லியல் திணைக்களமும் மன்றில் முன்னிலையாகி, சிலைகள் மீள பிரதிஷ்டை செய்வதில் ஆட்சேபணையில்லையென அறிவித்தனர்.
இதையடுத்து, நாளை வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் சிலைகள் மீள பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1