உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

Date:

எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக வரும் ஜூன் 7ஆம் திகதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

கிரிக்கெட் உலகில் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் கவனம் பெற்று வரும் சூழலில் அடுத்தடுத்து இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணி என்ற அந்தஸ்தை இதன் மூலம் இந்திய அணி பெறுகிறது. கடந்த முறை நியூஸிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்: ரோகித் சர்மா (கப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்.

15 வீரர்கள் இடம் பெற்றுள்ள இந்த அணியில் ரஹானே சுமார் ஓராண்டுக்கு பிறகு அணிக்குள் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 19ஆம் திகதி அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்