சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் அல்லது இரவில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் அது கூறியது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1