தமது 23 வயது மகளை கடத்தி வைத்திருப்பதாக 65 வயது தொழிலதிபர் மீது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், வலிகாமம் பகுதியிலுள்ள பொலிஸ் பிரிவொன்றில் சில வாரங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.
யாழ்ப்பாணம் நகரை சேர்ந்த தொழிலதிபர் மீதே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வெளிநாட்டில் நீண்டகாலம் வாழ்ந்து வந்த அந்த தொழிலதிபர், கடந்த 20 வருடங்களாக இலங்கையில் வசிக்கிறார். தென்னிலங்கையிலுள்ள தேசிய கட்சியொன்றின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் அவர் அண்மையில் நியமனமாகியிருந்தார்.
சுன்னாகத்தை சேர்ந்த குடும்பமொன்றே தொழிலபர் மீது குற்றம் சுமத்தியது.
இதையடுத்து, குறிப்பிட்ட பிரிவு பொலிசாரால் தொழிலதிபரும், யுவதியும் அழைக்கப்பட்டனர்.
தனது சுயவிருப்பத்துடனேயே தொழிலதிபருடன் வாழ்க்கை நடத்துவதாக அந்த யுவதி பொலிசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, பொலிசார் மேற்கொண்டு நடவடிக்கையெடுக்க முடியாமல் போனது.
இந்த பெண்ணுடனான உறவு, தொழிலதிபருக்கு இலங்கையில்- கடந்த 20 வருடங்களில்- 4வது உறவாகும்.
இந்த சம்பவம் பொலிஸ் நிலையம் வரை சென்றதற்கு வேறொரு காரணமுள்ளதாக தொழிலதிபர் தரப்பு கூறுகிறது.
தொழிலதிபர் இலங்கையில் 3வதாக குடும்பம் நடத்தியது 33 வயது பெண்ணுடன். அதாவது அவர் இருபதுகளின் இறுதியில் இருக்கும் போதே, அறுபதுகளின் தொடக்கத்திலிருந்த தொழிலதிபருடன் காதலில் விழுந்துள்ளார்.
அந்த உறவை தொழிலதிபர் முறித்து விட்டார்.
3வது காதலி தரப்பு, தொழிலதிபரின் 4வது இலங்கை காதலியின் குடும்பத்துடன் தொடர்பேற்படுத்தி, அவர்களை பொலிஸ் நிலையம் வரை அனுப்பியதாக தகவல். சட்டபூர்வமில்லாத திருமணங்கள் என்றாலும், தொழிலதிபர், தன்னுடன் வாழ்ந்த பெண்களிற்கு சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விட்டே பிரிந்து செல்கிறார். (இது அவரது மோசமான செயல்களை நியாயப்படுத்த குறிப்பிடப்படவில்லை)
தொழிலதிபருக்கும், 3வது இலங்கை காதலிக்கும் ஒரு பிள்ளையும் உள்ளது.
காதலிக்காக கொக்குவிலில் சில கோடி ரூபா மதிப்புள்ள வீடொன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஒரு தொகை பணமும் கொடுத்துள்ளார்.அதன் பின்னரே, 23 வயது காதலியுடன் புதிய வாழ்க்கைக்குள் நுழைந்துள்ளார்.
அத்துடன், 3வது காதலியுடனான தொடர்பையும் நிறுத்தி விட்டார். பணமும் கொடுப்பதில்லை. வயசாளி என்றாலும் பணம் காய்க்கும் மரமாயிற்றே காதலன். 3வது காதலி அவரை விடுவதாயில்லை.
யாழ். நல்லூருக்கு அண்மையாக உள்ள தனது பூர்வீக வீட்டில் புதிய காதலியுடன் தொழிலதிபர் வாழ்ந்து வரும் சமயத்தில், சில வாரங்களின் முன்னர் அந்த வீட்டிற்குள் 3வது காதலி நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டார். 4வது காதலிக்கு அடித்து உதைந்துள்ளார்.
தொழிலதிபர் 4வது காதலியை தற்போது கொழும்பில் தங்க வைத்துள்ளார்.
பணம் காதலும் செய்யும்.