சூடானில் வசிக்கும் அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, சீனக் குடிமக்களும் இராஜதந்திரிகளும் அங்கிருந்து விமானத்தின் மூலம் வெளியேற்றப்படவுள்ளனர்.
சூடானிய இராணுவம் வெளியிட்ட அறிக்கை அதனைத் தெரிவித்தது.
இன்னும் சில மணிநேரத்தில் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைக்கு இராணுவத் தலைவர் பத்தா அல்-புர்ஹான் இணங்கியுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.
சூடானில் இராணுவமும், துணை இராணுவப்படையும் அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளன.
ஒரு வாரத்துக்குமேல் நாடெங்கும் நடைபெறும் சண்டையில் இதுவரை 400 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புக் குறித்த அச்சம் காரணமாக, வெளிநாட்டவரை வெளியேற்றும் திட்டம் இதற்குமுன் செயல்படுத்தப்படவில்லை.
தலைநகர் கார்தூமிலிருந்து இராணுவப் போக்குவரத்து விமானங்களில் வெளிநாட்டவர் ஏற்றிச் செல்லப்படுவர் என இராணுவ அறிக்கை தெரிவித்தது.
சவூதி அரேபியா, தனது குடிமக்களையும் சகோதர நாட்டுக் குடிமக்களையும் சூடானிலிருந்து வெளியேற்ற ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தது.



