சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

Date:

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படம் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.

தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

படத்தின் முதல் சிங்கில் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ பெப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்தப் படம் வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் சனிக்கிழமை வெளியாகியுள்ளது.

படத்தின் வெளியீடு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ருவிட்டர் பக்கத்தில், “பிரிய சகோதார, சகோதரிகளே வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி மாவீரன் திரையில் உங்களைச் சந்திக்க வருகிறான்” என்று தெரிவித்து மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1649752448012259330

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பில் சூம் வழியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கு எதிர்ப்பு!

தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்...

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்