ஐசிசி ஆடவர் ரி20 வீரர்கள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கையின் மகேஷ் தீக்ஷன 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது சிறந்த தரவரிசை இடம் இதுவாகும்.
மற்றொரு இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க டி சில்வா 4வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் 710 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மற்றொரு ஆப்கான் வீரர் ஃபசல்ஹக் ஃபாரூக்கி 692 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் ஜோஸ் ஹொசில்வூட் 690 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஹசரங்க 686 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர். 682 புள்ளிகளுடன் மகேஷ் தீக்ஷன மற்றும் இங்கிலாந்தின் அடில் ரஷீட் 5வது இடத்தில் உள்ளனர்.
துடுப்பாட்ட வீரர்களிற்கான தரவரிசையில் ஃபோர்ம் இழந்து தவித்து வரும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்திலேயே நீடிக்கிறார்.
பாகிஸ்தான் ஜோடி முகமது ரிஸ்வான் மற்றும் கப்டன் பாபர் ஆசாம் 2,3வது இடத்தில் உள்ளனர்.
சனிக்கிழமை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் ஐந்து போட்டிகள் கொண்ட ரி 20I தொடரின் முடிவில் முதலிடத்தில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், நியூசிலாந்து தொடக்க வீரர்டிம் சீஃபர்ட், கடந்த வாரம் இலங்கைக்கு எதிராக அடித்து நொறுக்கியதை தொடர்ந்து, 1,245 இடங்கள் உயர்ந்து 36வது இடத்திற்கு முன்னேறினார்.




