வவுனியா மாவட்டத்தில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஆவணப்படுத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களிற்கிடையில் நேற்று வவுனியாவில் நடந்த கலந்துரையாடலில் இந்த தீரமானம் எடுக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 பங்காளிக்கட்சிகள், தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய 10 கட்சிகளும், பல பொதுஅமைப்புக்களும் கலந்து கொண்டன.
இதன்போது, வவுனியா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்த சுட்டிக்காட்டப்பட்டது. தொல்பொருள் திணைக்களம், வனவளதிணைக்களம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்கள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு, பண்பாட்டு அழிப்பு விவகாரங்களை ஆவணப்படுத்தி சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்கும் செயற்பாட்டிற்கு 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.