இலங்கைக்கு எதிரான ஹமில்டன் ரிசர்வ் வங்கியின் கடனாளி வழக்கை நிராகரிப்பதற்கான இலங்கையின் கோரிக்கையை நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஹமில்டன் ரிசர்வ் வங்கி இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் முதிர்ச்சியடைந்த 5.875 சதவீத சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களின் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை பணம் மற்றும் வட்டியை செலுத்தாமை காரணமாக நியுயோர்க் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த ‘ஹமில்டன் ரிசர்வ்’ வங்கி, அதன் பத்திரங்களுக்கான வட்டி மற்றும் பணத்தை ஒரே நேரத்தில் செலுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை கோரியது.
செப்டெம்பர் 21, 2022 அன்று, ஹமில்டன் ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரத் தவறுக்காக தாக்கல் செய்யப்பட்ட புகாரை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் ஒரு மனுவை தாக்கல் செய்தது.
ஒரு வங்கியால் தொடங்கப்பட்ட வழக்கு “நெருக்கடியில் உள்ள ஒரு தேசத்தின் மீது செல்வாக்கு பெறுவதற்கும் மற்ற சர்வதேச கடன் வழங்குநர்களை விட முன்னேறுவதற்கும் வெளிப்படையான முயற்சி” என்று கூறி, நாட்டின் கடன் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கரீபியன் தீவுகளான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸில் அமைந்துள்ள ஹாமில்டன் ரிசர்வ் வங்கி, 1 பில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் சட்ட நடவடிக்கையைத் தொடங்கியது.
5.875% சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் ஜூலை 25, 2022 அன்று செலுத்தப்பட வேண்டும்.
நீதிமன்ற பதிவுகளின்படி, ஹமில்டன் ரிசர்வ் வங்கி பத்திரங்களின் நிபந்தனைகளின் கீழ் மொத்தம் 257,539,331.25 அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு செலுத்த வேண்டியுள்ளது. அசல் 250,190,000 டொலர்கள். வட்டி 7,349,331.25 டொலர்கள்.
நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டெனிஸ் கோட், இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனம் தாக்கல் செய்த மனுவை மார்ச் 24 அன்று தள்ளுபடி செய்தார்.
எனவே, நிலுவைத் தொகையை இலங்கை அரசு உடனடியாக செலுத்த வேண்டுமா என்பதை முடிவு செய்ய வழக்கு தொடரும்.