யாழ் சிறைச்சாலையில் நூலகம் திறக்கப்பட்டது!

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைகழகம் தனது கற்றல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கு அப்பால் தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சமூகப் பொறுப்பாண்மை மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகளில் அண்மைக் காலமாக ஈடுபாட்டு வருகின்ற நிலையில் பல்கலைக் கழகத்தின் சமூகப் பொறுப்பாண்மையின் ஒரு அம்சமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் தனது சமூக வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நூலக நியமங்களுக்கு ஏற்றவாறான 2500 புத்தகங்களை கொண்ட நூலகம் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்சுமி அருளானந்தம் சிவநேசன் குடும்பம், ஐ.பி.சி தமிழ் மற்றும் தன்னார்வலர்கள்,யாழ் பல்கலைக்கழக நூலகத்தின் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டது.

இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறசற்குணராஜா ,யாழ் பிரதேச செயலர் சுதர்சன்,யாழ் சிறைச்சாலை அத்தியட்சகர் உதயகுமார,யாழ் சிறைச்சாலை ஜெயிலர் கெரத்,யாழ் பல்கலைக்கழக உதவி நூலகர்கள்,யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்,சிறைச்சாலை மருத்துவர், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ,கைதிகள் என பலரும் கலந்து கொண்டன்ர.

இந்நூலகத்திற்கு தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு, ஆலோசனைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்