25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil
ஆன்மிகம்

சோபகிருது- பஞ்சாங்கம்

சகல செல்வங்களையும் தரப்போகும் சோபகிருது வருடம் உத்தராயனப் புண்ணிய காலம் வசந்த ருதுவில், பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில், 14.4.23 அன்று பிறக்கிறது. சோபகிருது என்றாலே மங்கலம்தான். ஆக, இந்த வருடம் முழுவதும் சகல மங்கல காரியங்களும் அதிகரிக்கும்.

இந்த வருடத்தின் நட்சத்திர தேவதை – இரண்யகர்ப்பர். இந்த வருடத்தின் ராசாதிபதியாக புதன் வருகிறார். புதிதாகக் கனிம வளப் படுகைகள் கண்டறியப்படும். வருடப் பிறப்பு ஜாதகத்தில் புதன் சூரியன், ராகு ஆகியோர் சேர்ந்திருக்கிறார்கள்.

கல்வி நிலையில் முன்னேற்றம் உண்டாகும். நவகிரக ஆதிபத்தியங்களில் இந்த வருடத்துக்கு ராஜாவாக வரும் புதன், நவாம்ச சக்கரத்தில் தசமகேந்திரம் பெற்றதால், அறிவியல் சிந்தனைகளில் நாட்டம் அதிகரிக்கும்.

இந்த வருடத்துக்குச் சுக்கிரன் மந்திரியாக வருகிறார். ஆகவே, மலைப் புறங்களில் மழை அதிகரிக்கும்; விளைச்சலும் பெருகும். குடும்பத்தில் பெண்களின் கை ஓங்கும்.

அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி ஆகிய மூவித ஆதிபத்தியங்களுடன் குருபகவான் திகழ்கிறார். ஆகவே, பறவைகள், கால்நடைகள், மரங்கள் நன்கு சுபிட்சம் பெறும். மழைப் பொழிவும் அதிகம் உண்டு. அதேபோல் குரு பகவானின் பார்வை பலனால் தொழில்நுட்பத் துறையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

இந்த ஆண்டு சிம்ம லக்னத்தில் பிறக்கிறது. ஆகவே, விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்கள் கைகொடுக்கும். சனி பகவான் தான்யாதிபதியாக வருகிறார். தானியங்களின் விலை அதிகரிக்கும்.

இந்த சோபகிருது வருடத்தில் தொழில்கள் சார்ந்த பலன்கள் எனில், ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும். பட்டு, ஜவுளி, தங்க நகைகள், மணல், சிமெண்ட் ஆகியவற்றின் விலை உயரும். சுற்றுலாத் துறையில் சற்று லாபம் உண்டு. வெளிநாட்டு உதவியுடன் பலவித தொழிற்சாலைகள் அமைய வாய்ப்பு உண்டு.

சந்திரனுக்கு 2இல் சனி நிற்கிறார். அவர் தனது சொந்த வீடான கும்பத்தில் ஆட்சி பெறுகிறார். அவருடைய பார்வை நிலையால், வாசனைத் திரவியங்கள், வெல்லம், இரும்பு, கனிமப்பொருள்கள் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு சிற்சில நெருக்கடிகள் உண்டாகலாம்.சந்திரன் 6 இல் மறைந்திருகிறார். ஆகவே சளித் தொல்லை மற்றும் இறுமல் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

இந்த வருடத்தில் சில அரசியல் தலைமைகளுக்கு நெருக்கடிகளும் எதிர்ப்புகளும் உண்டாக வாய்ப்பு உண்டு. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை நவீனமயமாகும். மேகாதிபதியாக வரும் குருபகவான் தனது சொந்த வீட்டில் சுக்கிரனுடன் இணைந்து இருப்பதால் சில வெப்ப நோய்கள் ஏற்படலாம்.

வருடப் பிறப்பின்போது, ராஜ கிரகங்கள் அனைத்தும் ஆட்சி பெற்று இருப்பதால் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ்வார்கள். கூட்டுப் பிரார்த்தனைகளும் உலக நன்மையை வேண்டும் பொது வழிபாடுகளும் அமைதியையும் ஆனந்தத்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.

சோபகிருது வருட வெண்பா பலன்

சோபகிருது புத்தாண்டு குறித்து சித்தர் பெருமான் இடைக்காடரின் வெண்பா கீழ்க்காணும்படி அமைகிறது.

சோபகிருது தன்னிற் றெல்லுல கெலாஞ் செழிக்கும்
கோபமகன்று குணம் பெருகும் சோபனங்கள்
உண்டாகு மாரியொழியா மற்பெய்யுமெல்லாம்
உண்டாகு மென் றேயுரை.

கருத்து: பாரம்பர்யமான – பழைமையான வரலாற்றுச் சிறப்பு மிக்க நாடு, நகரங்கள் எல்லாம் செழிப்படையும், மக்கள் மனதில் கோபம் விலகி நற்குணங்கள் அதிகமாகும். காலம் தவறாது மழை பொழியும். மக்கள் சகலவித நலன்களும் பெற்று மகிழ்வார்கள்.

நவ நாயகர்களின் நிலை 

புதன் – ராஜ்ஜியாதிபதி, ரஸாதிபதி
சுக்கிரன் – மந்திரி
குரு -அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி.
சந்திரன் – ஸஸ்யாதிபதி, நீரஸாதிபதி
சனி – தான்யாதிபதி
பசுநாயக்கர் – பலபத்ரன்

இந்த வருடத்தில் கிரகணங்கள்… கிரகப் பெயர்ச்சிகள் 

சோபகிருது வருடத்தில் 3 சூரிய கிரகணங்கள் நிகழும். ஆனால், அவை இந்தியாவில் தெரியாது. அதேபோல் 3 சந்திர கிரகணங்கள் நிகழும். அவற்றில் ஒன்று மட்டுமே இந்தியாவில் தெரியும்.

சந்திர கிரகணம்: சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 11ஆம் நாள் (28.10.23) சனிக்கிழமை, பெளர்ணமி அன்று பார்சுவ சந்திர கிரகணம் நிகழ்கிறது. ராகு கிரகஸ்தம். இரவு 1:05 மணிக்குத் தொடங்கி இரவு 2:23 மணிக்கு நிறைவுறுகிறது.

சனிக் கிழமை பிறந்தவர்கள், அசுவினி, பரணி, மகம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்துகொள்ள வேண்டும்.

குருப்பெயர்ச்சி: இந்த வருடம் சித்திரை 9ஆம் திகதி (22.4.23) சனிக்கிழமை இரவு 11:24 மணிக்கு மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு (அசுவினி 1ஆம் பாதம்) பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.

ராகு-கேது பெயர்ச்சி: புரட்டாசி 21 (8.10.23) ஞாயிறன்று பகல் 3:35 மணிக்கு, ராகு பகவான் மேஷத்திலிருந்து மீன ராசிக்கும்; கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment