27 C
Jaffna
January 22, 2025
Pagetamil
சினிமா

ஒரேநாளில் வெளியாகும் விமலின் இரண்டு படங்கள்

நடிகர் விமலின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விமல். தொடர்ந்து ‘கிரீடம்’, ‘குருவி’, ‘பந்தயம்’, ‘காஞ்சிவரம்’ உள்பட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க’ படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமானார். இதன் பின் ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’,’தேசிங்கு ராஜா’,’ஜன்னல் ஓரம்’, ‘புலிவால்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் விமர் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ இணைய தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவரது இரண்டு படங்களான குலசாமி மற்றும் தெய்வ மச்சான் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சரவண சக்தி, இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் குலசாமி. இப்படத்தில், விமலுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

குலசாமி படத்துடன் சேர்ந்து, விமலின் தெய்வ மச்சான் என்ற படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விமல் மற்றும் பிக் பாஸ் அனிதா சம்பத், ஆடுகளம் நரேன், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் பாண்டிய ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமத்தில் வாழும் அண்ணன் தங்கையின் பாசத்தை மையமாக கொண்டு தெய்வ மச்சான் படம் உருவாகியுள்ளது.

அதன்படி, விமல் நடிப்பில் குலசாமி-தெய்வ மச்சான் ஆகிய இரண்டு படங்களுமே வரும் 21ஆம் திகதியன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

Leave a Comment