வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் காரால் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்டார். ஐந்து பேர் காயமடைந்தனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரால் மோதி தாக்குதல் நடத்தியவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஒரு இத்தாலிய சுற்றுலாப் பயணி கொல்லப்பட்டதாகவும் மேலும் ஐந்து இத்தாலிய மற்றும் பிரிட்டிஷ் குடிமக்கள் காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களில் 17 வயது இளைஞர் உட்பட மூவர் மிதமான காயம் அடைந்தனர், இருவர் லேசான காயம் அடைந்துள்ளனர் என்று மீட்பு சேவை தெரிவித்துள்ளது.
ஒரு இஸ்ரேலிய பாதுகாப்பு ஆதாரம் தாக்குதல் நடத்தியவர் காஃப்ர் காசிம் நகரத்தைச் சேர்ந்த இஸ்ரேலிய அரேபியர் என்று அடையாளம் கண்டுள்ளது.
டெல் அவிவ் நகரிலுள்ள முக்கிய நடைபாதைக்கு அருகே பலர் காயமடைந்ததையும் ஒரு கார் கவிழ்ந்ததையும் கண்ட அருகில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்தார். துப்பாக்கியை இழுக்க முயன்றபோது அந்த அதிகாரி ஓட்டுனரை சுட்டுக் கொன்றார் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஒரு பூங்காவின் புல்வெளியில் ஒரு வெள்ளை நிற கார் தலைகீழாக கவிழ்ந்துள்ளதையும், அவசர உதவியாளர்களால் நிரம்பியிருந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்திருந்ததையும் காண்பிக்கும் காணொளிகள் வெளியாகியிருந்தன.
இஸ்ரேல்- பாலஸ்தீனியர்களிற்கிடையில் மோதல் ஆரம்பித்ததை தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இஸ்ரேலிய சகோதரிகள் கொல்லப்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாவது கொடிய தாக்குதல் இதுவாகும்.
பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு “அனைத்து ரிசர்வ் எல்லை காவல் பிரிவுகளை அணிதிரட்டுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தினார் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள கூடுதல் படைகளை அணிதிரட்ட IDF (இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்)” என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெல் அவிவ் தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் சுற்றுலா பயணிகள் என்று இஸ்ரேலின் மேகன் டேவிட் அடோம் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
எல்லை காவல் துறையின் நான்கு ரிசர்வ் கம்பெனிகள் வரும் நாட்களில் வரவழைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.