24.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இந்தியா

முன்னாலும் பின்னாலும் பெண்கள்.. பைக்கில் அபாய சாகசம்: யூரியூப் ஸ்டண்ட் இளைஞரை தேடிப்பிடித்த போலீஸ்!

யூடியூப் தளம் பிரபலமானதையடுத்து சூப்பர் பைக் மோகம் இளைஞர்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. என்ன விலை விற்றாலும், கடன் வாங்கியாவது சூப்பர் பைக்குகளை வாங்கி வீடியோ வெளியிட்டு ஆத்ம திருப்தி அடைகிறார்கள் சில இளைஞர்கள்.

இந்த பைக்குகளில் வீலிங் (முன் சக்கரம் உயர்த்தப்பட்ட நிலையில் பின் சக்கரத்தில் பைக்கை ஓட்டுதல்) செய்யவில்லை என்றால் தெய்வக்குற்றமாகி விடும் என்கிற ரீதியில் யூடியூப் முழுவதும் சாக வீடியோக்கள் நிறைந்து கிடக்கின்றன.

அந்த வகையில் ஏற்கெனவே பல பைக் சாகச வழக்குகளில் சிக்கி சிறை சென்ற மும்பை இளைஞர் ஒருவர் தற்போது வித்தியாசமான முறையில் சாகச வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பயாஸ் காத்ரி என்ற அந்த இளைஞர் வெறுமனே வீலிங் செய்வதில் விரக்தியடைந்தாரோ என்னவோ, 2 பெண்களை வைத்து சாலை நடுவே சர்க்கஸ் காட்டியுள்ளார்.

தனது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் முன்புறம் ஒரு பெண்ணையும், தனக்கு பின்புறம் மற்றொரு பெண்ணையும் அமர வைத்து ஆபத்தான முறையில் வீலிங் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் 3 பேருமே தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்பதுதான்.

பைக் சாகசத்தை பார்த்த மும்பை பாந்த்ரா குர்லா போலீசார் கண்களுக்கு பைக்கின் நம்பர் பிளேட் தெளிவாகத் தெரிந்துள்ளது. அதை வைத்து சம்பந்தப்பட்ட இளைஞர் தங்கியிருந்த ஆன்டோப் ஹில் குடியிருப்புக்கு போலீசார் விரைந்தனர்.

வீலிங் சாகசம் செய்து களைப்பாக விட்டத்தை பார்த்து படுத்திருந்த இளைஞரை அலுங்காமல் அள்ளிச் சென்றனர் போலிசார்.

அவர் மீதும் அவருடன் பைக்கில் பயணம் செய்த இரு பெண்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 308ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

east tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

Leave a Comment