26.2 C
Jaffna
January 30, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக இன்று நண்பகல் 12.13 மணியளவில் கொரளவெல்ல, இங்கிரிய, கிரியெல்ல, எம்புல்தெனிய, ஹல்துமுல்ல, ரத்மல்வெஹெர மற்றும் வரதெனியாவ ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் இன்று உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவையின் மரணத்தில் மர்மம்

east tamil

மாவைக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள அனுர!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

மாவை சேனாதிராஜா – ஒரு அரசியல் சரித்திரம்

east tamil

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை

east tamil

Leave a Comment