25.5 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இலங்கை

‘வரி அதிகமில்லை; நாங்களும்தான் தியாகம் செய்கிறோம்’: அமைச்சர் பந்துல!

36 வீதத்தை உழைக்கும் வரியாக செலுத்த வேண்டும் என்று சிலர் தவறான பிம்பத்தை சித்தரித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மாதாந்தம் 147,000 ரூபா வருமானம் ஈட்டும் ஒருவர் செலுத்த வேண்டிய வரியாக ரூபா 2500 மாத்திரமே செலுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், 200,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர் 7,500 ரூபாய் வரியாக செலுத்த வேண்டும்.

எரிவாயுவின் விலை 1005 ரூபாவினாலும் பெட்ரோலின் விலை 60 ரூபாவினாலும் குறைக்கப்பட்டு வாரத்திற்கு 20 லீற்றர் பெற்றோல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பெட்ரோல் மூலம் மக்களுக்கு மாதம் ரூ.4.800 லாபம் கிடைக்கிறது. எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை குறைவினால், ஒரு நபருக்கு ரூ.5,805 சேமிப்பு கிடைக்கிறது.

காஸ், பெட்ரோலைக் குறைப்பதால் அவருக்கு ரூ.6,000 லாபம் கிடைக்கும். 200,000 சம்பாதிக்கும் நபர் 7,500 ரூபாயை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்துகிறார் என்றும் அமைச்சர் கூறினார்.

“ரூ. 100,000 க்கும் குறைவாக சம்பாதிக்கும் நபருக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை என்பதால் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்த நபர் மறைமுக வரி செலுத்துகிறார்,” என்றார்.

100,000 ரூபாவிற்கும் குறைவான வருமானம் ஈட்டுபவர்கள் ஒவ்வொரு தனிநபரின் குறுகிய அரசியல் இலக்குகளை அடைவதற்காக போராட்டங்களில் ஈடுபடுவதாக அமைச்சர் கூறினார்.

“ஒரு நாட்டின் ஆசிரியர்கள் கற்பிப்பதை நிறுத்திவிட்டு போராட்டங்களில் ஈடுபட்டால், எதிர்கால சந்ததியினரின் கதி என்னவாகும். சம்பாதிக்கும் போது 36 சதவீதம் வரி கட்ட வேண்டும் என்ற போலி கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி எதுவும் இல்லை,” என்றார்.

அரசின் வருவாயை அதிகரித்து செலவுகளை குறைக்க வேண்டும். அரசாங்கத்தின் செலவினக் குறைப்பு சுற்றறிக்கையின் பிரகாரம் நான் முதலாவது உத்தியோகபூர்வ பயணமாக கொழும்பில் இருந்து மாஸ்கோ வரை சென்றேன். அரசு செலவினங்களை குறைக்கும் வகையில், அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களில் எக்கனோமி வகுப்பில் பயணிக்க வேண்டும் என அரசு அறிவித்தது. அதன்படி ஒன்பது மணி நேரம் எக்கனோமி வகுப்பில் பயணம் செய்தேன். நாங்களும் அத்தகைய தியாகங்களைச் செய்கிறோம்,” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊழல் அரசியலை ஒழிக்க உறுதி – ஜனாதிபதி

east tamil

மருந்து உற்பத்தி விரைவில் அதிகரிக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

யாழில் சுழல் காற்றால் 48 குடும்பங்கள் பாதிப்பு

Pagetamil

விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

east tamil

Update: மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம்

east tamil

Leave a Comment