Pagetamil
குற்றம்

கணவருக்கே தெரியாமல் தலையணைக்குள் மறைத்து வைத்திருந்தவை மாயம்!

படுக்கையறையில்  தலையணைக்குள் அடைத்து- கணவருக்கு கூட தெரியாமல் கவனமாக வைத்திருந்த பதினைந்து இலட்சத்து தொண்ணூறு ஆயிரத்தை யாரோ திருடிச் சென்றுள்ளதாக பெண்ணொருவர் வெயாங்கொடை பொலிஸில் நேற்று (4) முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டாளர் சுகாதார அமைச்சில் பணிபுரிகிறார்.

நிலத்தை விற்று கிடைத்த தொகையின் ஒரு பகுதியான இந்தத் தொகையை அவர் வங்கியில் வைப்புச் செய்திருந்தார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வங்கிகள் முடங்குமென சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவலை பார்த்துள்ளார். இதனால் பணம் தனக்கு கிடைக்காமல் போய்விடும் என அச்சமடைந்தவர், கடந்த ஜனவரி மாதம் ஒரு நாள் கணக்கில் இருந்த பணத்தை தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தான் கொண்டு வந்த பணத்தாள்களை தலையணைக்குள் மிகவும் கவனமாக மறைத்து வைத்ததாக அவர் கூறியதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இந்த தலையணையை தலையில் வைத்துக்கொண்டு தான் தூங்குவதாகவும், தலையணைக்குள் பணம் இருப்பது கணவருக்கோ, வேறு யாருக்குமோ தெரியாது என்றும் அவர் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

தலையணையில் மறைத்து வைத்திருந்த பணத்தை யார் திருடியது என்று நினைத்துக்கூட பார்க்க முடியாமலுள்ளதாக அவர் கூறுவதாகவும் போலீசார் குறிப்பிடுகின்றனர்.

நேற்று முன்தினம் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து படுக்கையறைக்கு சென்றபோது, ​​பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலையணை கிழிந்து போர்வை சிதறி கிடந்ததை பார்த்தார்.

தலையணையில் பணம் இல்லாததை பார்த்து போலீசில் புகார் செய்தார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment