விபத்தில் 3 பேர் பலி

Date:

வெல்லவாய தனமல்வில வீதியில் யாலபவ செல்லபவ சந்திக்கு அருகில் கெப் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தனமல்வல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், அவரது மனைவி மற்றும் சார்ஜன்ட்டின் தந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனமலவிலயிலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, எதிர்திசையில் பயணித்த கெப் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெப் வண்டியுடன் மோதிய முச்சக்கர வண்டி சுமார் 30 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் அவரது தந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளான சார்ஜென்ட்டின் மனைவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவாய பரகஸ்மாங்கட முகவரியைச் சேர்ந்த ஆர்.எம்.சந்திரரதன (44), ஆர்.எம்.அக்மன் ரத்நாயக்க (65) மற்றும் எச்.கே.தில்கா ரத்நாயக்க (43) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்