லாஃப்ஸ் எரிவாயு விலைகளும் நாளை குறைகிறது!

Date:

LAUGFS எரிவாயு நிறுவனமும் தனது வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படும்.

முன்னதாக, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 1000 ரூபாவால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகள் விலை குறைப்புக்கு காரணம் என தலைவர் பீரிஸ் தெரிவித்தார்.

12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை இன்று அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்