டொனால்ட் ட்ரம்பை நிர்வாணமாகப் பார்ப்பதை விட வேறு எதுவும் “பயங்கரமானதாக” இருக்க முடியாது என்பதால், நீதிமன்றத்தில் டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்வதில் தான் பயப்படவில்லை என்று ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 10 பெண்கள், டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.
இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் ட்ரம்ப்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.
தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் வைரலான நிலையில், அது ட்ரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 130,000 அமெரிக்க டொலர்கள் ட்ரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வரி மற்றும் வங்கி மோசடி உள்ளிட்ட கூட்டாட்சி பிரச்சார நிதிச் சட்டங்களை மீறியதற்காக ஆட்சி மாறியதும் ட்ரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.
அந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் ட்ரம்பே தெரிவித்தது பரபரப்பானது. இந்தநிலையில் அவர் விரைவில் சரண்டர் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வார தொடக்கத்தில் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் சரணடைவார் என்று அவரது வழக்கறிஞர் ஜோ டகோபினா தெரிவித்தார்.
ஆபாசபட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், இவரது இயற்பெயர் ஸ்டெபானி கிளிபோர்ட். ஸ்டோர்மி டேனியல்ஸின் கூற்றுப்படி, அவர் ஜூலை 2006 இல் ஒரு கோல்ஃப் போட்டியின் போது டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார். அப்போது டொனால்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். ஆபாச நட்சத்திரம் ஸ்டார்மி டேனியல்ஸுக்கு அப்போது 27 வயது, டிரம்புக்கு 60 வயது. ஜூலை 2006 இல் கோல்ப் போட்டியின் போது ஸ்டோர்மியும் ட்ரம்பும் சந்தித்தனர். ட்ரம்பை சந்தித்தபோது, அவரது மூன்றாவது மனைவி மெலனியாவுக்கு மகன் பரோன் பிறந்தார். பரோன் பிறந்து 4 மாதங்கள்தான் ஆகிறது.
ட்ரம்பின் மெய்க்காப்பாளர்கள் தன்னை ஒரு புதிய நட்சத்திரத்தின் பென்ட்ஹவுஸில் இரவு உணவிற்கு அழைத்ததாக ஸ்டோர்மி கூறினார். ட்ரம்புடன் தனக்கு இருந்த உறவு மற்றும் அவரது உடல் தோற்றம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை ஸ்டோர்மி டேனியல்ஸ் தனது “முழு வெளிப்படுத்தல்” புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்தநிலையில் ட்ரம்ப் குறித்து பிரிட்டிஸ் செய்தி நிறுவனமான த டைம்ஸ் நாளிதழுக்கு ஸ்டோர்மி டேனியல்ஸ் பேட்டி அளித்துள்ளார்.
அதில் கூறும்போது, ”டொனால்ட் ட்ரம்பை பார்த்து எனக்கு பயமில்லை. அவரை நிர்வாணமாக பார்த்தவள் நான். எனவே அவர் ஆடையுடன் வந்து என்னை பயமுறுத்த முடியாது. டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே ஒரு கலவரத்தைத் தூண்டிவிட்டு, மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தியவர். அவர் தற்போது கைது செய்யப்பட்டாலும் அல்லது விளைவு எதுவாக இருந்தாலும், அது வன்முறையை ஏற்படுத்தப் போகிறது.
நான் அவரைப் பற்றியோ அல்லது அரசாங்கத்தைப் பற்றியோ பயப்படவில்லை, ஆனால் கடவுளின் வேலையைச் செய்கிறோம் அல்லது ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் என்று நினைக்கும் ஒரு பைத்தியக்கார ஆதரவாளரை மட்டுமே எடுத்துக்கொள்கிறேன் … நீங்கள் தண்ணீரில் இரத்தத்தை விரும்பவில்லை. இது ஒருவகையில் சுறாக்களை ஊக்குவிக்கிறது… இது மிகவும் பயமாக இருக்கிறது, ஏனென்றால் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டி அதை ஊக்குவிக்கிறார்.
ட்ரம்பிற்கு எதிராக சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நம்புகிறேன். நான் பயப்படவில்லை, மறைக்க எதுவும் இல்லை, எனக்குத் தெரிந்ததை எல்லோரிடமும் சொல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.