காதலிக்க மறுத்த 15 வயதான பாடசாலை மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்திய 30 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்ஓயா பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இயங்கி வரும் ஞாயிறு அறநெறி பாடசாலையில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.
விகாரை வளாகத்திற்குள் நுழைந்த திருமணமாகாத நபர் ஒருவர் இந்த கொடூர குற்றத்தை செய்துள்ளார், சந்தேக நபர் கத்தியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை மோசமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1