Pagetamil
இலங்கை

யாழில் கிறிஸ்தவசபையின் சிறுவர் இல்லத்திலிருந்து மீட்கப்பட்ட 13 சிறுவர்கள்!

யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்நடத்தை அலுவலர்களினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ அறிக்கைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய சபை என்ற கிருஸ்தவ சபையினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலகர்கள் இன்று முற்பகல் அங்கு சென்றனர்.

அதன்போது 13 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் உரிய வகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்

east tamil

சமஷ்டி ஆட்சி அமைத்தால் நாடு அபிவிருத்தி அடையும் – சிறிநேசன் எம்.பி

east tamil

பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

east tamil

பேர வாவி பறவைகள் உயிரிழப்புக்கு விசம் காரணம்?

Pagetamil

கையூட்டல் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

east tamil

Leave a Comment