ஜப்பானில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்றி சுமார் 30 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுகன்னாவையில் விகாராதிபதியாக இருந்த பிக்குவுக்கு 10 முதல் 15 இலட்சம் ரூபா வரையில் பணம் வழங்கியதாக 11 பேரிடம் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
பணம் கொடுத்தவர்கள் விகாரைக்கு வந்து கொடுத்த பணத்தைக் கேட்பதால் அப்பகுதியை விட்டு வெளியேறி, பிக்குவுக்குரிய ஆடைகளை களைந்தவர், வில்கமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் ஒளிந்திருந்தார்.
ஜப்பானில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து சுமார் 40 பேர் பிக்குவிடம் பணம் கொடுத்துள்ளனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் விசேட மோசடி விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.




