ஹட்டன் – அவிசாவளை வீதியில் இங்கிரிவத்தை பகுதியில் கடந்த 20 ஆம் திகதி பிற்பகல் 3.20 மணியளவில் முச்சக்கர வண்டியும் வானும் மோதிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக கிதுல்கல பொலிஸார் தெரிவித்தனர்.
இகிரிவத்தை, தளிகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி உயிரிழந்த சிறுமி தனது தாய் மற்றும் தந்தையுடன் தளிகம பகுதியை நோக்கி பயணித்த போது எதிர் திசையில் வந்த வான் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
பெற்றோர் மற்றும் சிறுமி ஆகியோர் காயமடைந்து கருவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரவு 7 மணியளவில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
வானில் பயணித்த ஒருவரும் காயமடைந்துள்ளதுடன் அவர் தற்போது கருவானெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்த சிறுமியின் தாய் கர்ப்பிணி பெண் என்பதுடன் வயிற்றில் இருந்த குழந்தையும் விபத்தில் உயிரிழந்துள்ளது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.