கணவரைப் பிரிகிறார் நிஹாரிகா?

Date:

தமிழில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தவர் நிஹாரிகா. தெலுங்கு நடிகையான இவர், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள். நாகபாபு, தமிழில் ‘விழித்திரு’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நிஹாரிகா, ஆந்திர போலீஸ் அதிகாரி பிரபாகர் ராவின் மகன், சைதன்யா என்பவரைக் காதலித்து வந்தார்.

இவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு, உதய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சைதன்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஹாரிகாவுடன் இருக்கும் அனைத்துப் புகைப்படங்களையும் திருமண வீடியோவையும் நீக்கியுள்ளார். நிஹாரிகாவும் சைதன்யாவை இன்ஸ்டாவில் பின் தொடர்வதை நிறுத்திவிட்டார். இதனால் இருவரும் விவாகரத்துப் பெற உள்ளதாகத் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். இப்படத்தின் போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக அப்போது செய்தி வெளியாகியிருந்தது.

பின்னர், நிஹாரிகா பான் இந்தியா ஸ்டார் ஹீரோ பிரபாஸை திருமணம் செய்யப் போகிறார் என்ற மற்றொரு செய்தியும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.

நிஹாரிகாவைப் பற்றிய செய்திகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை, ஆனால் இறுதியில் அவர் தனது மைத்துனரான சாய் தரம் தேஜுடனும் உறவில் இருப்பதாக செய்திகள் வந்தன.

எனினும், இந்த செய்தியை இருவரும் மறுத்தனர். ஆனால், திருமண வாழ்க்கையில் சச்சரவுகள் ஏற்பட்டு, கடைசியில் விவாகரத்து வரை சென்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்