27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

மாணவி வித்தியா கொலையாளிகளின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரிதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிரதிவாதிகளின் மேல்முறையீட்டு மனுக்களை ஒக்டோபர் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை நிர்ணயித்தது.

இந்த மேல்முறையீடுகள் கோரப்பட்ட நேரத்தில், சிறையில் இருந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான “சுவிஸ் குமார்” பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை நடத்திய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், 2017ஆம் ஆண்டு ஏழு பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்தது.

தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை குற்றங்களில் இருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

Leave a Comment