கிழக்கு

கிழக்கு மாகாண காணி பிரச்சினை மற்றும் தேசிய காணி கொள்கை தொடர்பில் செயலமர்வு

கிழக்கு மாகாண காணி பிரச்சினை மற்றும் தேசிய காணி கொள்கை தொடர்பில் மக்கள் காணி ஆணைக்குழுவின் அறிக்கை சிபாரிசு செய்வதற்கு கிழக்கு மாகாண மட்டத்தில் உள்ள பல்லின அரசியல் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு இன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள அட்டப்பளம் தனியார் விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த செயலமர்வினை காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி மற்றும் மனித எழுச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன் காணி தொடர்பிலான பல்வேறு விளக்கவுரைகள் வளவாளர்களால் வழங்கப்பட்டு இச்செயலமர்வில் கருத்துரைகள் பல முன்வைக்கப்பட்டன.

செயலமர்வில் ஆரம்பத்தில் பங்கேற்பாளர்கள் பதிவு இடம்பெற்றதுடன் அம்பாறை மாவட்ட காணி பிரச்சினை தொடர்பில் வரப்புயர என்ற பெயரில் காணொளி ஒன்று காண்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்ட மனித எழுச்சி நிறுவன செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமான கே.நிஹால் அகமட் வரவேற்புரையில் செயலமர்வின் நோக்கம் மற்றும் கிழக்கு மாகாண காணி பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக உரை ஒன்றினை மேற்கொண்டார்.

தொடர்ந்து மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கை என்றால் என்ன? தொடர்பில் காணொளி ஒன்று திரையிடப்பட்டது.

காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் மக்கள் நில ஆணையக் குழு தயாரித்த கொள்கைப் பரிந்துரையின் அறிமுகம் குறித்து மக்களின் காணி ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சந்துன் துடுகல என்பவரால் கருத்துரைகள் வழங்கப்பட்டது.

அடுத்து மக்களின் காணிக் கொள்கையின் பரிந்துரையை எவ்வாறு முன்வைத்தல் தொடர்பில் மக்கள் காணி ஆணைக்குழு ஆணையாளர்களான சட்டத்தரணி ஏர்மீசா டீக்கல மற்றும் தோட்ட மக்களின் உரிமை தொடர்பான சமூக செயற்பாட்டாளர் கணேசலிங்கம் கணேஸ் விரிவாக விளக்கவுரைகளை வழங்கினர்.

இறுதியாக இச்செயலமர்வில் பல்லின அரசியல் பிரதிநிதிகளுடன் கருத்துக்கள் மக்களின் காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் கிழக்கு மாகாணத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் காணி கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை அடையாளம் காணுதல் என்பன இடம்பெற்று காணிக் கொள்கையில் பல்லின அரசியல் பிரதிநிதிகள் கருத்துக்கள் அடங்கிய செய்தியாளர் சந்திப்புடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டு வங்கி பெட்டகத்திலிருந்த நகைகளை திருடிய 3 உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்!

Pagetamil

மட்டக்களப்பில் சிக்கிய பலாப்பழ ஹெரோயின்

Pagetamil

அம்பாறையில் வளர்ப்பு புறா மூலம் போதைப்பொருள் கடத்தல் முயற்சி

Pagetamil

மட்டக்களப்பில் இலங்கை வங்கியில் பாரிய கொள்ளை முயற்சி: ATM உடைப்பு

Pagetamil

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை புறக்கணித்த கிழக்கு ஆளுனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!