உக்ரைனிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட புடின்!

Date:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் இன்று திடீர் பயணமாக உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட் மரியுபோல் நகருக்கு விஜயம் செய்தார்.

புடின் ஹெலிகாப்டர் மூலம்  பல மாவட்டங்களில் பயணம் செய்தார் என்று கிரெம்ளினை மேற்கோள் காட்டி TASS நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள முக்கிய நகரமான மரியுபோல், உக்ரைனின் முக்கிய நகரமாக இருந்தது. துறைமுக நகரமான இங்கு, எஃகு உற்பத்தி ஆலைகள் உள்ளன. கடந்த பெப்ரவரியில் இங்கு மோதல் ஆரம்பித்து, ஏப்ரலில் ரஷ்ய படைகள் நகரத்தை கைப்பற்றின.

மரியுபோலில் விமான நிலையங்களை மீள ஆரம்பிப்பது, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது பற்றி புடின் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, கிரிமியா பிராந்தியம் ரஷ்யாவுடன் இணைந்ததன் ஒன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி ரஷ்ய ஜனாதிபதி அங்கு விஜயம் செய்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி

100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள...

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்