நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நடுன் சிந்தக மற்றும் குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷித ஆகியோர் இலங்கை அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள், மடகாஸ்கரில் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இருவரும் இன்று (15) காலை 7.20 மணியளவில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக விமான நிலைய பேச்சாளர் தெரிவித்தார்.
மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் விசேட குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்களைப் பெற்றுள்ளது.



