கொலம்பியாவில் அரை நீர்மூழ்கி கப்பலில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி!

Date:

கொலம்பியவில் அரை நீர்மூழ்கி கப்பலில் போதைப்பொருள் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிசுபிசுத்துள்ளது. 3 தொன் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் அரை நீர்மூழ்கி கப்பல் மீட்கப்பட்டது.

கப்பலிற்குள் இருவர் உயிரிழந்த நிலையிலும், இருவர் உயிருக்கு போராடியபடியும் காணப்பட்டதாக கொலம்பியா கடற்படை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) அறிவித்தது,

பசிபிக் பெருங்கடலில் இந்த அரை நீரில் மூழ்கக்கூடிய கப்பல் கைப்பற்றப்பட்டது.

உயிர் பிழைத்த இரண்டு கடத்தல்காரர்களும் மோசமான உடல்நிலையில்” உள்ளனர். அவர்களின் உயிரைக் காப்பாற்ற மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

“எரிபொருளில் இருந்து நச்சு வாயுக்கள் உருவாகியதால், அரை நீரில் மூழ்கக்கூடிய கப்பலுக்குள் விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது” என்று கடற்படை தெரிவித்துள்ளது.

படகில் உள்ள எரிபொருள் பிரச்சனைகளால் ஏற்படும் நச்சுப் புகைகளை உள்ளிழுப்பதால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கடற்படை தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 87 மில்லியன் டொலர்கள்  என மதிப்பிடப்பட்டுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல், மீட்கப்பட்டவர்கள், உடல்கள் ஆகியவை ஈக்வடோர் எல்லைக்கு அருகே தென்மேற்கு கொலம்பியாவில் உள்ள டுமாகோவில் உள்ள துறைமுகத்திற்கு கடற்படையால் அழைத்துச் செல்லப்பட்டன. போதைப்பொருள் ஏற்றுமதி மத்திய அமெரிக்காவிற்கு சென்றதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...

ஏழைகளை வித்தியாசமாக நடந்த முடியாது: ரூ.225,000 இழப்பீடு வழங்க 3 பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2023 ஆம் ஆண்டில் ஹன்வெல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்