இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 319.84 ரூபாவாகவும் விற்பனை விலை 335.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, ரூபாவின் பெறுமதி கடந்த தினத்தை விட இன்று (14) வீழ்ச்சியடைந்துள்ளது.



