‘சிறிதரன் எம்.பி கூப்பிடுகிறார்’; நோயாளியை பாதியிலேயே விட்டுச் சென்றதாக வைத்தியர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அழைக்கிறார் என குறிப்பிட்டு, நோயாளியை பரிசோதித்து முடிக்காமல் இடைநடுவில் வெளியேறிச் சென்றார் என கிளிநொச்சியிலுள்ள தனியார் வைத்திய நிலைய வைத்தியர் ஒருவர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி கிளை அலுவலத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

நேற்று (13) இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டு, இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்கராயன்குளத்தை சேர்ந்த ஒருவர் நோய் வாய்ப்பட்ட தனது தாயாரை அழைத்துக் கொண்டு, நீண்ட தூரம் பயணித்து கிளிநொச்சி வந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள தனியார் வைத்திய நிலையமொன்றிற்கு சென்றதாகவும், அங்குள்ள வைத்தியரிடம் சிகிச்சைக்கு சென்ற போது, 5 நிமிடம் வரை தாயாரை பரிசோதித்து சில விடயங்களை சிட்டையில் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, மன்னிக்கவும் என கூறியபடி வந்த ஒருவர், சிறிதரன் எம்.பி கூட்டமொன்றிற்கு வருமாறு அழைத்ததாகவும், தாயாரை பரிசோதித்து இடைநடுவில் விட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கேள்வியெழுப்பிய போது, தன்னுடன் தரக்குறைவாக பேசியதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாட்டின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.-

Share post:

spot_imgspot_img

More like this
Related

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...

ஏழைகளை வித்தியாசமாக நடந்த முடியாது: ரூ.225,000 இழப்பீடு வழங்க 3 பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2023 ஆம் ஆண்டில் ஹன்வெல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்